கலெக்டர் தலைமையில் விவசாயிகள் நலக்கூட்டம்


கலெக்டர் தலைமையில் விவசாயிகள் நலக்கூட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2020 2:57 AM IST (Updated: 25 Dec 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சியில், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் மீனவ குடும்ப விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறு வகைகள் திட்டத்தின் கீழ், பின்னேற்பு மானிய விலையில் ரோட்டோ வீட்டர் கருவியை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, வேளாண்மை இணை இயக்குநர் சம்பத், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story