அந்தியூர், சென்னிமலை பகுதியில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்

அந்தியூர், சென்னிமலை பகுதியில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ஈரோடு,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா ஈரோடு வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பி.எஸ்.சச்சிதானந்தம் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் விஜய் சேமலை முன்னிலை வகித்தார். இதையொட்டி அந்தியூரில் உள்ள வாகீஸ்வரர், பத்ரகாளியம்மன், செல்லீஸ்வரர், விநாயகர் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தவுட்டுப்பாளையத்தில் உள்ள மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சேது வெங்கட்ராமன், நகர தலைவர் பூபதி, துணைத்தலைவர் உதயகுமார், வட்டார தலைவர் பழனிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராயல் ஆறுமுகம், அந்தியூர் நகர இளைஞரணி தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னிமலை
இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா சென்னிமலையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கு ரொட்டி, பால், பழம் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் பாரதியார் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் வெட்டி மதிய உணவு அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் நகர தலைவர் குமரேசன், மே.தா.கந்தசாமி, குருநாதன், ஜெகதீஸ்குமார், ஓ.பி.தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story