நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா - முதியவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவால் பலியானார்.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 11,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,273 ஆனது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. அதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,295 ஆக உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 109 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ராசிபுரத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது. இதுவரை மாவட்டத்தில் 11,012 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 173 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story