காங்கேயம் அருகே கஞ்சி காய்ச்சி குடித்து விவசாயிகள் போராட்டம்
காங்கேயம் அருகே படியூரில் விவசாயிகள் பங்கேற்ற கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டம்
காங்கேயம் அருகே படியூர் பகுதியில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்களில் முறையாக விவசாயம் செய்யமுடியவில்லை. எனவே உயர் அழுத்த மின்சாரத்தை கோபுரம் அமைத்து கம்பிகள் வழியாக கொண்டு செல்வதற்கு பதிலாக கேபிள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும்.
உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காங்கேயம் அருகே படியூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கஞ்சி காய்ச்சும் போராட்டம்
இந்த நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சுப்பராயன் எம்.பி., கலந்து கொண்டு, வாழ்த்திப் பேசினார்.
Related Tags :
Next Story