வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 8 பேர் கைது

வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் நெடுமுடையான் கிராமத்தில் இருந்து துறிஞ்சிப்பட்டு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவலிங்கம், பெரிய தம்பி மகன் அய்யப்பன், குள்ள கவுண்டர் மகன் ஏழுமலை, சுப்பிரமணியன் மகன் கதிர்வேல் என்பதும், அவர்கள் நாட்டுத்துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது தொடர்பாக நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த குட்டையன் மகன் சக்திவேல், நாராயணசாமி மகன் முத்துலிங்கம், ராமசாமி மகன் கேசவன், காத்தவராயன் மகன் ராஜா ஆகிய 4 பேரை சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story