நாடக கலைஞர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

சாலை பாதுகாப்பு குறித்து நாடக கலைஞர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
காரைக்கால்:
காரைக்கால் வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை சப்-கலெக்டர் ஆதர்ஷ் வழங்கினார்.
துண்டுபிரசுரத்தில் பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் குழந்தைகள், பெரியவர்களை ஏற்றும்போது டிரைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் போகும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியவேண்டும். சாலை விதிகளை அனைவரும் பின்பற்றவேண்டும் என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், ரகுநாயகம், போக்குவரத்து அதிகாரி குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பாசக்கயிறுடன் எமதர்மன், எருமை மாடு போல நாடக கலைஞர்கள் வேடமணிந்து வந்து போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
Related Tags :
Next Story