பெரம்பலூாில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூாில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 12:35 PM IST (Updated: 30 Jan 2021 12:35 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூாில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

பெரம்பலூர்:
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு செவிலியர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்ததோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அரசு செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜகோபால், செயலாளர் மோனிகா, பொருளாளர்கள் முருகேசன், ஸ்டீபன் ஆகியோர் பேசினர். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியர்கள் கண்காணிப்பாளர் மல்லிகா கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில செவிலியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். கொரோனாவினால் உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, கொரோனா பணிக்கு கொடுப்பதாக அரசு உறுதியளித்த ஒரு மாத ஊக்க ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை அறவே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story