குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்


குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2021 1:46 AM IST (Updated: 8 Feb 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் நடந்தது.

கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. 

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

நிகழ்ச்சியில் பூம்பாறை மற்றும் மேல்மலைப்பகுதியின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து மாலையில் சாமி பூந்தேர் வாகனத்தில் உலா வந்தார். திருவிழாவின் இறுதி நாளான இன்று (திங்கட்கிழமை) சாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகிகள், பூம்பாறை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story