சாலை விபத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவர் பலி


சாலை விபத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2021 3:10 AM IST (Updated: 8 Feb 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவர் பலியானார்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவரான நவல்பட்டு பூலாங்குடிகாலனியை சேர்ந்த சரவணன் (வயது 48) கடந்த 29-ந்தேதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்ததில் படுகாயம் அடைந்தார். இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story