மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதியில் சுமார் 6, 500 ஏக்கர் பரப்பளவில், அமராவதி பாசனத்தின் மூலம் கடத்தூர், கணியூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கண்ணாடிபுதூர், மடத்துக்குளம், குமரலிங்கம், கொழுமம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மடத்துக்குளம் பகுதிகளில் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர் கனமழை, கடும் பனி, இவற்றை கடந்து தற்போது கோடை காலத்துவக்கமான பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை, விரைவான அறுவடை பணிகள், நேரக்குறைவு, போன்ற பல்வேறு காரணங்களை முன்னிட்டு, மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
கொள்முதல்
வயல் நிலங்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, வயல்வெளி பகுதியிலேயே தார்பாய் விரிக்கப்பட்டு, அதன் மீது குவியலாக கொட்டப்படுகிறது. பின்னர் குவித்து வைக்கப்பட்ட நெல்லை, மூட்டைகளாக பிடிக்கப்பட்டு, டெம்போவில் ஏற்றப்பட்டு, அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் நெல்லின் பாதுகாப்பு, விலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம் பகுதியில், தற்போது அறுவடை செய்யப்பட்டு நெல் கொள்முதல்நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்லை, கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு பிரச்சினை, மற்றும் கனமழையால் பயிர்கள் சேதம், போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஆறுதல் தரும் வகையில், விவசாயிகளின் நெல்லை தற்போது கூடுதல் விலைக்கு அரசு கொள்முதல் செய்ய முன் வர வேண்டும்.
பாதுகாப்பு
மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை தார்பாய் கொண்டு, மூடி வைக்க வேண்டும். வெட்ட வெளியில் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட உள்ளதால், இப்பகுதியில் உள்ள எலி, பெருக்கான், போன்ற தொல்லைகளில் இருந்தும் மற்றும் மழை, வெயில், பனி, போன்ற இயற்கை இடர்பாடுகளிலில் இருந்தும், விவசாயிகளின் நெல்லை கூடுதல் பாதுகாப்புடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story