வெள்ளகோவில், சைனிக் பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு
வெள்ளகோவில் சைனிக் பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு மாணவ-மாணவிகள் எழுதினர்.
வெள்ளகோவில்,
இந்தியா முழுவதும் மொத்தம் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன, இந்தப் பள்ளிகளில் 2021 - 2022 கல்வி ஆண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நேற்று நடத்தப்பட்டது. 33 பள்ளிகளில் சேர நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்ற நுழைவுத்தேர்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
வெள்ளகோவில் சத்தியம் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் இதர மாநிலங்களில் இருந்து மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.இதில் 14 பேர் தேர்வு எழுத வரவில்லை.226 பேர் மட்டும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு நடக்கும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர், தேர்வுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கிருமிநாசினி கொடுத்தும், சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
Related Tags :
Next Story