தமிழர் உரிமை மீட்பு களத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் உரிமை மீட்பு களத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 1:36 AM IST (Updated: 9 Feb 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தமிழர் உரிமை மீட்பு களத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
தமிழர் உரிமை மீட்பு களத்தினர் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் தாஜீத் பாண்டியன், நிர்வாகிகள் கணேச பாண்டியன், உதய பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்செயலாளர் கதிரவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி கிராமத்தில் ராகுல் என்ற வாலிபர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திருக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story