குளித்தலையில் விவசாயிகள் தர்ணா

வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக்கோரி கட்டளை, தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஒன்று கூடினர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அந்த அலுவலகத்திற்குள் அமர்ந்து தண்ணீர் திறக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
அவர்களிடம் ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், தாசில்தார் முரளிதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள், கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மற்றும் தென்கரை வாய்க்கால் நீர் பாசனத்தை கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பணப்பயிரான வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம்.
வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. எனவே, வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறினர்.

இன்று தண்ணீர் திறப்பு
அதற்கு அதிகாரிகள் தரப்பில், தென்கரை வாய்க்காலில் இன்று (புதன்கிழமை) தண்ணீர் திறக்கப்படும் என்றும், கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் வழங்க உயர் அதிகாரிகளை கலந்தாலோசித்து ஒரு வாரத்திற்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒரு வார காலத்திற்குள் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story