ஆராய்ச்சி மாணவர் உள்ளிருப்பு போராட்டம்


ஆராய்ச்சி மாணவர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 1:07 AM IST (Updated: 10 Feb 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஆராய்ச்சி மாணவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மணிகண்டம், பிப்.10-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஜீவா. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இவர் கேட் தேர்வில் அகில இந்திய அளவில் 76-வது இடம் பிடித்துள்ளார். மேலும் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தநிலையில் இவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விடாமல் பேராசிரியர் ஒருவர்  சொந்த வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பு தெரிவித்ததால் தன்னை ஆராய்ச்சி படிப்பை விட்டு நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த  பேராசிரியர் மேற்கொண்டுள்ளதாகவும், உதவித் தொகையை தராமல் வைத்துள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கூறினார். இது தொடர்பாக சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் மாணவர் ஜீவா சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவேன் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story