மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
உடுமலை:
உடுமலையில், தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகளை ரூ.3 ஆயிரமாகவும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உடுமலையில் இந்த சங்கத்தினர், தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவதற்கு வந்தனர். அவர்களை தாலுகா அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவு வாயிலில், போலீசார் தடுத்துநிறுத்தினர். அத்துடன் பிரதான நுழைவு வாயிலின் கதவும் பூட்டப்பட்டது.
நுழைவு வாயிலில் தர்ணா
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அதே இடத்தில் நுழைவு வாயில் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் மாலினி தலைமைதாங்கிபேசினார்.சங்க மாவட்ட குழு உறுப்பினர் குருசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ், நகரசெயலாளர் தெண்டபாணி, சி.ஐ.டி.யு.மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், மாவட்ட குழு உறுப்பினர் ரங்கநாதன் உள்பட பலர் பேசினர்.
அங்குவெயிலில் உட்கார்ந்து இருந்த மாற்றுத்திறனாளிகள் சிறிது நேரம் கழித்து, போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள குட்டைத்திடலுக்கு வந்தனர்.அங்கு அமைக்கப்பட்ட சாமியானா பந்தலில் உட்கார்ந்து போராட்டத்தைத்தொடர்ந்தனர்.
Related Tags :
Next Story