மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மாணவன் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Feb 2021 7:36 PM IST (Updated: 10 Feb 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்,
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது பருத்திக்காட்டுவலசை. இந்த ஊரைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது62). விவசாயியான இவர் மாடுகளுக்கு தீவனம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வைரவன்கோவில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். 
அப்போது திருப்புல்லாணி அருகே பூச்சி வலசை பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 ேமாட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது.
2 பேர் பலி
இந்த விபத்தில் பால்பாண்டியும், விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்டித்தேவன் வலசையை சேர்ந்த நல்லமுத்து மகன் கரண் என்பவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 இவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ் பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
மாணவன்
விபத்தில் பலியான கரண், தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். அவருடைய அக்காளை கல்லூரியில் இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story