நகை மதிப்பீட்டாளர் மனைவியுடன் கைது

நகை மதிப்பீட்டாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
சாயல்குடி,
கடலாடியில் ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பரமக்குடியை சேர்ந்த சண்முக பாண்டி (வயது46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்தார். இந்த வங்கியில் அடகு வைத்த நகைகளை வாடிக்கை யாளர்கள் திருப்பியபோது நகைகள் போலியாக இருந்தன. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய் தனர். இதில் நகை அடமானக் கடனாக ரூ.81 லட்சத்துக்கு வைக்கப்பட்ட நகைகள் போலியாக இருந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கடலாடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தநிலையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை விசாரணை நடத்தி சண்முக பாண்டி, அவரது மனைவி வனிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story