ஏரியில் மூழ்கி மாணவர் பலி


ஏரியில் மூழ்கி மாணவர் பலி
x
தினத்தந்தி 11 Feb 2021 2:02 AM IST (Updated: 11 Feb 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் மூழ்கி மாணவர் பலியானார்.

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் மதியரசன் (வயது 9). இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை மதியரசன், அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றான். நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரியின் கரையில் மதியரசனின் உடைகள் மட்டும் இருந்தன. பின்னர், உறவினர்கள் சிலர் ஏரியில் இறங்கி தேடியபோது மதியரசனை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது குளிக்க சென்ற மாணவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஏரியில் மூழ்கி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story