தர்மபுரி, நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கு கொரோனா


தர்மபுரி, நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Feb 2021 4:42 AM IST (Updated: 12 Feb 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:
தர்மபுரி, நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேர், ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 3 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
14 பேர்
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 14 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story