உள்நாட்டு மீனவர்கள் ஒருங்கிணைப்பு மைய மாநாடு

நாகர்கோவிலில் நாளை (சனிக்கிழமை) உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய மாநாடு நடைபெற உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நாளை (சனிக்கிழமை) உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய மாநாடு நடைபெற உள்ளது.
மாநாடு
குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பு மைய மாவட்ட தலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் டன்ஸ்டன் ரமேஷ், துணைத் தலைவர்கள் ஜேசுராஜன், ஆறுமுகம், இசக்கிமுத்து, பால் நிக்ஸன், ஜார்ஜ் நியூட்டன் மற்றும் செயலாளர்கள் ஷாஜின் காந்தி, ஜோனி, ராஜன் ஆராச்சி, சாந்தி ஜார்ஜ், முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பு மைய மாவட்ட தலைவர் அந்தோணி, மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் டன்ஸ்டன் ரமேஷ் ஆகியோர் கூறியிருப்பதாவது:-
ஆயர்- அரசியல் கட்சியினர்
களியக்காவிளை முதல் ஆரல்வாய்மொழி வரை கல்வி, பொருளாதாரம், அரசியல், வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய வளாகத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது.
மாநாட்டில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசு ரத்தினம், அருட்பணியாளர் ஆன்றனி ரோசாரியோ, கோட்டார் பங்குதந்தை ஸ்டேன்லி சகாய சீலன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் உள்ள உள்நாட்டு மீனவர்கள் தங்கள் கோரிக்கைகள் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மாநாட்டில் பங்கேற்க ேவண்டும். மாநாட்டு நிகழ்ச்சிகளை குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய வரவேற்புக்குழு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story