கஞ்சா வியாபாரிகள் 3 பேர் தப்பி ஓட்டம்


web photo
x
web photo
தினத்தந்தி 19 Feb 2021 3:00 AM IST (Updated: 19 Feb 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வியாபாரிகள் 3 பேர் தப்பி ஓட்டம்

கீரமங்கலம்
கீரமங்கலம் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நேற்று முன்தினம் இரவு குளமங்கலம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து, அங்கு காத்திருந்த நபரிடம் கஞ்சா பொட்டலத்தை கொடுக்க முயன்றபோது போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், போலீசார் பிடியில் சிக்காமல் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story