முன்பதிவுக்காக குவிந்த காளையர்கள்

உசிலம்பட்டி அருகே சீமானூத்தில் வருகிற 24-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன் பதிவு செய்ய ஏராளமான மாடுபிடிவீரர்கள் குவிந்தனர்.
உசிலம்பட்டி,பிப்.
உசிலம்பட்டி அருகே சீமானூத்தில் வருகிற 24-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன் பதிவு செய்ய ஏராளமான மாடுபிடிவீரர்கள் குவிந்தனர்.
விழாக்கோலம்
உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்தில் வருகிற 24-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த ஊரில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இதையொட்டி சீமானூத்து ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு விழாவையொட்டி முதல் கட்டமாக நேற்று மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மொத்தம் 650 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டுக்கு பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.
சிறந்த மாடுபிடி வீரருக்கு புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்க விழா கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள், கட்டில், பீரோ, ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்பாடு
ஜல்லிக்கட்டும் நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்று உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
இன்று ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு நடைபெற உள்ளது என்று விழா கமிட்டினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story