கொண்டலாம்பட்டி அருகே செல்போன் பறித்த 2 பேர் கைது


கொண்டலாம்பட்டி அருகே செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2021 5:34 AM IST (Updated: 20 Feb 2021 5:40 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொண்டலாம்பட்டி,

வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 43). லாரி டிரைவர். இவர் கடந்த 16-ந் தேதி அன்று லாரியை கொண்டலாம்பட்டி அருகே கரட்டூர் பகுதியில் நிறுத்தி விட்டு, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மாணிக்கத்திடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கரட்டூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தாதகாப்பட்டி அம்மாள் ஏரி ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 24), மூணாங்கரடு பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும், அவர்கள் மாணிக்கத்திடம் செல்போனை பறித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் 18 வயது சிறுவனை சிறுவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Next Story