மனைவியை கட்டையால் தாக்கிய கணவர் கைது
மனைவியை கட்டையால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையை அடுத்துள்ள நல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50).இவரது மனைவி செல்வி (வயது45).குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது நாகராஜன், செல்வியை கட்டையால் தாக்கினாராம்.இதில் காயமடைந்த செல்வி அளித்த புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தார்.இதில் தொடர்புடைய மாரியம்மாள் என்ற பெண் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story