மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர்-மதுரை சாலை பள்ளத்தால் தொடர் விபத்து + "||" + Continuing accident due to Tirupati-Madurai road abyss

திருப்பத்தூர்-மதுரை சாலை பள்ளத்தால் தொடர் விபத்து

திருப்பத்தூர்-மதுரை சாலை பள்ளத்தால் தொடர் விபத்து
திருப்பத்தூர்-மதுரை சாலை பள்ளத்தால் தொடர் விபத்து நடந்து வருகிறது. சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
திருப்பத்தூர், 
திருப்பத்தூர்-மதுரை சாலை பள்ளத்தால் தொடர் விபத்து நடந்து வருகிறது. சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2 பேர் படுகாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- மதுரை நெடுஞ்சாலையில் கோட்டையிருப்பு கிராமத்தின் அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பத்தூரில் இருந்து மதுரைக்கு செல்லும் பிரதான சாலையான நெடுஞ்சாலையில் கோட்டையிருப்பு கிராமத்தின் மொட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.  நேற்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கோட்டையிருப்பு இளைஞர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பகுதியில் தினந்தோறும் அந்த பள்ளங்களில் இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோரிக்கை
அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலமுறை நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் அளித்தும் அதை சரி செய்ய முன்வரவில்லை. இதையடுத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளங்களில் ஜல்லி கற்களை கொண்டு நிரப்பி சரி செய்து வருகின்றனர்.  விபத்துகள் நடைபெறாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று இளைஞர்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.