தந்தை திட்டியதால் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை


தந்தை திட்டியதால் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2021 1:04 AM IST (Updated: 25 Feb 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

தந்தை திட்டியதால் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை

சோமரசம்பேட்டை, 
சோமரசம்பேட்டை அருகே தாயனூர் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மகள் செல்வி (வயது 18). சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தந்தை திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட செல்வி வீட்டில் உள்ள எலி மருந்து (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story