டாஸ்மாக் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய பணியில் உள்ள அனைவரையும் சட்டப்படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பாதுகாப்பான பணி சூழ்நிலையை உருவாக்க வேண்டும், சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொ.மு.ச. மாநில தலைவர் ராசவேல் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். தொ.மு.ச. மாநில செயலாளர் காமராஜன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், டாஸ்மாக் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கணபதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சவுரிராஜன், டாஸ்மாக் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் அய்யப்பன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட தலைவர் இளஞ்செழியன், தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சிங்காரம், மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story