அம்பை தாலுகா அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகை

அம்பை தாலுகா அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அம்பை, பிப்.28-
அம்பையில் உள்ள வழிபாட்டு தலத்தில் பொது நடைபாதையை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் கட்டப்படுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி, பா.ஜனதாவினர் அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பால்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story