ரத்து செய்யப்பட்ட தகவல் தெரியாமல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்

ரத்து செய்யப்பட்ட தகவல் தெரியாமல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரத்து செய்யப்பட்ட தகவல் தெரியாமல்
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்
திருச்சி, மார்ச்.1-
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜமால் முகமது கல்லூரியில் நேற்று மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதின் காரணமாக இந்த வேலை வாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை அறியாமல் நேற்று ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் பட்டதாரிகள் உரிய சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்தனர். அவர்கள் ஏராளமானவர்கள் கூடி நின்றால் கல்லூரி சார்பில் அவர்களிடம் முகாம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடி வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விண்ணப்ப படிவங்களை அங்கிருந்த பெட்டிகளில் போட்டு விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story