அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த இடங்கள் தேர்வு- கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
இடங்கள் தேர்வு
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்திட தொகுதி வாரியாக இடங்கள் தேர்வு செய்து ஒப்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும். மேலும் கொரோனா நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மரப்பாலம் நால்ரோடு, சூரம்பட்டி நால்ரோடு, சூரம்பட்டி 2-ம் நம்பர் பஸ் நிறுத்தம், சிம்னி ஓட்டல் எதிரில், சம்பத்நகர், திருநகர் காலனி ஆகிய பகுதிகளிலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், மூலப்பாளையம் மாரியம்மன் கோவில் திடல், மொடக்குறிச்சி கரியகாளியம்மன் கோவில் திடல், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூடம் எதிரில், எலவமலை கிராமம், காலிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவன்பாளையம், லட்சுமி நகர், பேரோடு, குட்டைதயிர்பாளையம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.
பொதுக்கூட்டங்கள்
இதேபோல் பவானி சட்டமன்ற தொகுதியில் குருப்பநாயக்கன்பாளையம், மைலம்பாடி ஊராட்சி, முனியப்பன்பாளையம், சேதுனாம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், பூதப்பாடி, கவுந்தப்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரிலும், அந்தியூா் சட்டமன்ற தொகுதியில் பிரம்மதேசம், மினியப்பன்பாளையம், காட்டுப்பாளையம், கொல்லம்பாளையம், விராலிகாட்டூர் காலனி, எண்ணமங்கலம் காலனி, எண்ணமங்கலம், புங்கமடுவு மேடு, குன்னிகாடு, கோவிலூர், மலையனூர் ஆகிய இடங்களில் அரசியில் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கோபி சட்டமன்ற தொகுதியில் கோபி பெரியார் திடல், மொடச்சூர் சந்தை திடல், சிறுவலூர் சந்தை திடல், நம்பியூர் பஸ் நிலைய தெற்குபுறம், நம்பியூர் கார் நிறுத்தம் எதிரில், அளுக்குளி பஸ் நிறுத்தம், காசிபாளையம் கருவலூர் மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திங்களூர் நால்ரோடு சந்திப்பு, மலையப்பாளையம் கார் நிறுத்தம், பெருந்துறை பங்களா வீதி, காஞ்சிக்கோவில் கிழக்கு ரத வீதி (தேரடி திடல்), சென்னிமலை கிழக்கு ரத வீதி, சென்னிமலை பஸ் நிறுத்தம் அருகில், வெள்ளோடு மாரியம்மன் கோவில் திடல் ஆகிய இடங்களும் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
பவானிசாகர் -மொடக்குறிச்சி
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் சத்தி வடக்குப்பேட்டை திப்புசுல்தான் ரோடு, தாளவாடி பஸ் நிறுத்தம் அருகில், புளியம்பட்டி மாதம்பாளையம் ரோடு திரு.வி.க. திடல், பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் ஆகிய இடங்களிலும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அவல்பூந்துறை வெள்ளோடு ரோடு, அறச்சலூர் கொடுமுடி கைகாட்டி, கொடுமுடி புதிய பஸ் நிலையம் அருகில், ஒத்தக்கடை, சாலைப்புதூர், சிவகிரி புதிய பஸ் நிலையம் மார்க்கெட் திடல் அருகில், சிவகிரி குமரன் சிலை அருகில், கருமாண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களை நடத்தலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story