மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டம் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடை திட்டம்
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும். மற்ற நகராட்சிகளை போல குப்பைகளை வகை பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது காமராஜர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் தொண்டர் ஒருவரை பாடையில் கட்டி இறந்தவரை தூக்கி செல்வதுபோல் ஊர்வலமாக புறப்பட்டனர்.
நூதன போராட்டம்
இந்த ஊர்வலம் கச்சேரி சாலை, காந்தி சாலை, பட்டமங்கலத்தெரு வழியாக நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது. அங்கு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், நிர்வாகிகள் கணேசன், மேகநாதன், ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story