நாமக்கல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 192 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட  192 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 2 March 2021 12:05 AM IST (Updated: 2 March 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 192 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் முதல்நாளான நேற்று 60 வயதுக்கு மேற்பட்ட 192 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை சுகாதார பணியாளர்கள், போலீசார், அரசு அலுவலர்கள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு மார்ச் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணைநோய் உள்ள நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக போடப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 19 மையங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இதேபோல் 20 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அங்கு கட்டணமாக ரூ.250 பெறப்பட்டது.
9,460 டோஸ் மருந்து இருப்பு
முதல்நாளான நேற்று 60 வயதுக்கு மேற்பட்ட 192 பேர் மற்றும் இணை நோய் உள்ள 178 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 370 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், 9,460 டோஸ் தடுப்பூசி மருந்து இருப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
========

Next Story