எடப்பாடி அருகே கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு


எடப்பாடி அருகே கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2021 3:08 AM IST (Updated: 2 March 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி:
எடப்பாடி அருகே கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நகைக்கடன்
எடப்பாடி அருகே சித்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக்கடன் கேட்டு ஒரு சிலர் கூட்டுறவு சங்கத்திற்கு சென்றுள்ளனர். 
அதற்கு அலுவலர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணம் இல்லை, பின்னர் வாருங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தேர்தல் அறிவிப்பு வந்ததையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 
அதனை தொடர்ந்து நேற்று 200-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று நகைக்கடன் வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு கூட்டுறவு சங்க அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தற்போது நகை கடன் தர முடியாது என கூறியுள்ளனர்.
வாக்குவாதம்
அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் முன்பு கூடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் அங்கு வந்து கூடியிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகை கடன் வழங்கும் போது உங்களுக்கும் கடன் வழங்கப்படும் என கூறி வந்தவர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் திரண்டு வந்து 6 மாதத்திற்கு முன்பு கடன் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் கொடுக்கவில்லை. இதனால் அரசு சலுகையை பெறமுடியாமல் போனது என அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சில மகளிர் சுயஉதவிகுழுவினருக்கு ரூ.22 லட்சம் ரூபாய்க்கான கடன் காசோலை வழங்கியும், அதனை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சரிவர பிரித்துக் கொடுக்காமல் விட்டதால் கடன் பெற முடியாமலும், அரசு வழங்கிய சலுகைகளை பெற முடியாமல் போனது எனக்கூறி கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் வாக்குவாதத்தில், ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story