திருப்பூர் மாவட்டத்தில் 385 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


திருப்பூர் மாவட்டத்தில் 385 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x
தினத்தந்தி 2 March 2021 4:23 AM IST (Updated: 2 March 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 385 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 385 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கேமரா மூலம் கண்காணிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வாக்குச்சாவடிகள்
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றிய விவரங்களை தயார் செய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மிகவும் பதற்றமானவை
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும், 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 372 வாக்குச்சாவடிகளில் 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும், 42 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், அவினாசி சட்டமன்ற தொகுதியில் 401 வாக்குச்சாவடிகளில் 10 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 535 வாக்குச்சாவடிகளில் 76 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 401 வாக்குச்சாவடிகளில் 65 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
385 வாக்குச்சாவடிகள்
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 548 வாக்குச்சாவடிகளில் 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும், 60 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், உடுமலை சட்டமன்ற தொகுதியில் 380 வாக்குச்சாவடிகளில் 59 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 357 வாக்குச்சாவடிகளில் 1 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும், 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. 
மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகளில் 4 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 381 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. மிகவும் பதற்றமான மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 125 கட்டிடத்தில் அமைந்துள்ளன. அந்த மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story