இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் தனது டிராக்டரை கழுவி சுத்தம் செய்துள்ளார். அப்போது சுத்தம் செய்த கழிவுநீர் அருகில் வசிக்கும் ஜெயபாலன் வீட்டின் முன்பு தேங்கி நின்றிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபாலன்(61), அவரது அண்ணன் மகன் கபில் ஆகியோர் முருகன் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முருகன் போலீசில் புகார் செய்து உள்ளார்.ஜெயபாலனும் தங்களை தாக்கியதாக முருகன், அவரது மனைவி சுதா(40), தாயார் புஷ்பம்(60) ஆகியோர் மீது புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.