கோத்தகிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு


கோத்தகிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 March 2021 11:26 PM IST (Updated: 3 March 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலையொட்டி கோத்தகிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோத்தகிரி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையினர் 90 பேர் நீலகிரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு படை, அதிரடி படை மற்றும் உள்ளூர் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு கோத்தகிரியில் நடைபெற்றது. கோத்தகிரி டானிங்டன் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு, காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம், கடைவீதி, காம்பை கடை, பழைய போலீஸ் நிலைய சாலை, காந்தி மைதானம் வழியாக ராம்சந்த் சதுக்கம் சென்று நிறைவடைந்தது.

இந்தக் கொடி அணிவகுப்பில் வஜ்ரா வாகனத்துடன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் காவல் நிலைய போலீசார் அணிவகுத்துச் சென்றனர். 

இதில் போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு மோகன் நிவாஸ் குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ், கோத்தகிரி இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சுரேஷ் உள்பட மொத்தம் 175 போலீசார் கலந்து கொண்டனர். மத்திய பாதுகாப்பு படையினர் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story