ரேஷன் அரிசியை பதுக்கிய அரிசி ஆலை உரிமையாளர் கைது

400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய அரிசி ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
போடி:
போடி புதூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் பீர்ஒலி (வயது 50). இவர் அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். இந்தநிலையில் பீர்ஒலியின் அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, பின்னர் அவற்றை கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மணிகண்டன் தலைமையிலான போலீசார், அவரது அரிசி ஆலையில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பீர்ஒலியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story