போலீசார் மீது கல்வீச்சு-தடியடி; 6 பேர் மண்டை உடைப்பு
லால்குடி அருகே கோவில் திருவிழாவில் அம்மன் வீதிஉலா செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது பாட்டில், கற்கள் வீசி தாக்கியதில் 6 போலீஸ்காரர்களின் மண்டை உடைக்கப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
லால்குடி,
லால்குடி அருகே கோவில் திருவிழாவில் அம்மன் வீதிஉலா செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது பாட்டில், கற்கள் வீசி தாக்கியதில் 6 போலீஸ்காரர்களின் மண்டை உடைக்கப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
ஆச்சிராமவல்லி அம்மன் கோவில்
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வல்லிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த 1994-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பாதையில் இருந்து ஒரு சமுதாயத்தினர் வசிக்கும் வீதிகளில் அம்மன் வீதி உலா வர வேண்டும். அங்குள்ள மக்கள் கொடுக்கும் பலி பூஜைகளை ஏற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. மேலும் திருவிழாவும் நடைபெறாமல் தடைபட்டது.
மாசி திருவிழா
இதுதொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுப்படி, திருவிழா நடத்தப்பட்டது. அப்போதும், தங்கள் பகுதிக்கு அம்மன் வீதி உலா வந்து, பலிபூஜைகளை ஏற்கக்கோரி அந்த சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீஸ் உதவியுடன் திருவிழா நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் விசாரணை நடத்தி, பழங்கால முறைப்படி கொடியேற்றத்துடன், காப்புகட்டும் திருவிழா தொடங்கி தினமும் நடைபெறும் என்றும், அன்பில் சிவன்கோவிலில் இருந்து ஆச்சிராமவல்லியம்மன் புறப்பாடும், அதன் தொடர்ச்சியாக வழக்கமான வைபவங்களும் நடத்தப்பட்டு, விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறும் என்றும் கடந்த மாதம் 11-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
காப்பு கட்டுதல்
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 16-ந்தேதி முதல் காப்பு கட்டுதலும், 22-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடைபெற்றது. அப்போது, தங்கள் பகுதிக்கு அம்மன் வீதி உலா வந்து, பலிபூஜைகளை ஏற்கக்கோரி அந்த சமுதாயத்தினர் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து லால்குடி ஆா்.டி.ஓ. வைத்தியநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, இரு தரப்பினரும் பேசி முடிவெடுத்த பின்னர் திருவிழாவை நடத்தலாம் என்று தேதி குறிப்பிடாமல் திருவிழாவை ஒத்திவைத்து கடந்த 23-ந்தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 26-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், தக்கார் மனோகரன் முன்னிலையில் மாசி தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை பெறப்பட்டது.
அம்மன் வீதி உலா
பின்னர், திருவிழா தொடங்கிய முதல் காப்பு சாமிக்கு கட்டி, அடுத்து அந்த சமுதாயத்தினருக்கு காப்பு கட்டப்பட்டு அவர்களுக்கு மரியாதை தரப்படுகிறது. மேற்படி திருவிழா காப்பு கட்டுதல் தொடங்கி திருவிழா முடியும் வரை கோவில் பழக்க வழக்கத்திற்கு மாறாக, வேறு இடத்தில் ஒரு சமுதாயத்தினர் பகுதி மக்களின் வழிபூஜைகள் அம்மனுக்கு பழக்க வழக்கப்படி சமர்ப்பிக்கப்பட்டு அவைகள் ஏற்கப்படுகிறது. இதில் மற்றவர்களுக்கு வழங்கப்படுவது போல் எவ்வித பாகுபாடுமின்றி உரிய மரியாதைகள் செய்யப்படுகிறது.
தற்போது அம்பாள் திருவீதி உலா வரும் பாதையை கூடுதலாக இதர பகுதிகளுக்கு வரச்செய்யும் கோரிக்கை மட்டும் தற்போது கோவில் நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை. இதில் வேறு எந்தவிதமான அணுகுமுறையும், பாகுபாடும் கோவில் நிர்வாகத்திற்கு இல்லை. இதில் எவ்வித சாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து பிரிவினரும் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்கின்றனர். எனவே திருவிழா தொன்று தொட்டு வரும் ஆலய பழக்கவழக்கப்படி நடத்த முடிவு செய்ய தீர்மானித்து ஆணை பிறப்பித்தார்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் அந்த சமுதாயத்தினர் தங்கள் வீதிகளுக்கு அம்மன் வீதி உலா வர வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அப்போது, வழக்கமான மந்தையிலிருந்து கூடுதலாக 10 அடி தூரம் வரை சாமி வீதி உலா வர ஏற்பாடு செய்கிறோம் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர்.
கல்வீச்சு-தடியடி
இந்தநிலையில் நேற்று காலை சிவன்கோவிலில் இருந்து, ஆச்சிராமவல்லி கோவில் நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அப்போது, வழியில் அண்ணா நகர் என்ற இடத்துக்கு அம்மன் வீதிஉலா வந்த போது, திடீரென பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது ஒரு கும்பல் சோடா பாட்டில் மற்றும் கற்கள் வீசப்பட்டன.
அப்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிவிரைவு படையை சேர்ந்த மணிமாறன் உள்பட 6 பேருக்கு கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த கும்பலை நோக்கி சென்று தடியடி நடத்தினார்கள்.
144 தடை உத்தரவு
இதற்கிடையே திருவிழாவை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒருதரப்பினர் லால்குடி-அன்பில் சாலையில் பல்வேறு இடங்களில் தடைகளை ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன், சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடைகளை அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story