கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் குறைப்பு


கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் குறைப்பு
x
தினத்தந்தி 11 March 2021 3:32 AM IST (Updated: 11 March 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 8-ந் தேதி மாலை 4 மணி முதல் இந்த தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,800 கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் அளவு மேலும் குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 244 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Next Story