மருந்துக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை; பவானி கோர்ட்டு தீர்ப்பு

பவானியில் மருந்துக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பவானி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பவானி
பவானியில் மருந்துக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பவானி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பெண்ணிடம் ெநருங்கி...
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 44). இவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகி வந்து உள்ளார். இந்த நிலையில் அந்த பெண் திடீெரன பிரபு உடனான பழக்கத்தை துண்டித்து விட்டார். மேலும் அந்த பெண் பவானியில் மேட்டூர் ரோட்டில் மருந்து கடை வைத்திருந்த ஒருவரிடம் நெருங்கி பழகி வந்தார். இதுபற்றி தெரிந்ததும் பிரபு, அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி வந்தவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 13-6-2009 அன்று பிரபு மற்றும் அவருடைய நண்பரான திருப்பூர் மங்களம் பகுதியை சேர்ந்த மன்சூர் அகமத் (33) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் பவானி வந்தனர்.
கொலை
அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி வரும் மருந்து கடைக்காரர் இவர்தான் என தவறாக நினைத்து அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த இன்னொரு மருந்துக்கடை உரிமையாளரான சண்முகம் என்பவர் மீது ஆசிட்டை அவர்கள் 2 பேரும் வீசினர். இதில் படுகாயம் அடைந்த சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு மற்றும் மன்சூர் அகமத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா. ‘பிரபு மற்றும் மன்சூர்அகமத் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் 2 பேரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும்’ உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பிரபு மற்றும் மன்சூர் அகமத் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story