நெல்லை அருகே குத்துவிளக்கு, செல்போன்கள் பறிமுதல்
நெல்லை அருகே குத்துவிளக்கு, செல்போன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே குத்துவிளக்கு, செல்போன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படையினர் சோதனை
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 தொகுதிகள் உள்ளன.
மேற்கண்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதை தவிர்க்கும் வகையில் 15 பறக்கும் படைகள், 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை அருகே பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 175 குத்துவிளக்குகள், 590 பம்பரங்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போன்கள் பறிமுதல்
நெல்லை - பாபநாசம் நெடுஞ்சாலையில் வீரவநல்லூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சங்கரகுமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அம்பையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர் பழையபேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன் (வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் அவர் உரிய ஆவணங்கள் இன்றி 65 செல்போன்கள் மற்றும் 50 பேட்டரிகளை கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சேரன்மாதேவி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story