ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆணையாளருடன் ஆலோசனை


ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆணையாளருடன் ஆலோசனை
x
தினத்தந்தி 13 March 2021 2:43 AM IST (Updated: 13 March 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆணையாளருடன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆணையாளருடன் ஆலோசனை நடத்தினார்.
செலவின பார்வையாளர்கள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் செலவின பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமார் தேவ், அந்தியூர் மற்றும் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால் ஜட், பவானி மற்றும் பவானிசாகர் தொகுதிகளுக்கு பவானி சங்கர் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆலோசனை
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி செலவின பார்வையாளர் அரூப் சட்டர்ஜி நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் பணியை பார்வையிட்டார். அப்போது அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என்றும், கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசித்தார்.
அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான இளங்கோவன், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு உள்ள வசதிகள் குறித்து செலவின பார்வையாளர் அரூப் சட்டர்ஜியிடம் எடுத்து கூறினார்.
----------------

Next Story