விழிப்புணர்வு ஓவிய போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்தல், புதுமையாக சிந்திக்க செய்தல், கலை மீது ஈடுபாடு கொள்ள செய்தல் மற்றும் குழு மனப்பான்மை ஏற்படுத்துதல் போன்றவற்றை உருவாக்கும் நோக்கத்தில் விழிப்போடு இருப்போம் - விரட்டுவோம் கொரோனாவை என்ற தலைப்பில் ஓவிய வண்ணம் தீட்டுதல் போட்டிகள் முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் நடத்தப்பட்டது. மாணவர்களை வீட்டில் இருந்தபடியே ஓவியங்களை வரைய செய்து பள்ளிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது.அதன்படி மாணவர்கள் அனுப்பிய படைப்பில் இருந்து தலைமையாசிரியர்கள் சிறந்த 3 படைப்புகளை தேர்வு செய்து ஒன்றிய அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.11 ஒன்றியங்களிலும் 929 பள்ளிகளில் சிறந்த ஓவிய படைப்புகள் பெறப்பட்டு வட்டார கல்வி அலுவலர் தலைமையிலான குழு ஒன்றியத்தில் சிறந்த 3 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அம்மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்.
11 ஒன்றியங்களிலும் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சுழல் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.ஒன்றிய அளவிலான ஓவியத் திருவிழா போட்டிகளை உதவித் திட்ட அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் மாவட்ட தகவல் சாதன ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மற்றும் அனைத்து வட்டார வள மேற்பார்வையாளர்களும் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story