தூத்துக்குடிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை


தூத்துக்குடிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை
x
தினத்தந்தி 13 March 2021 9:43 PM IST (Updated: 13 March 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் 3 பேர் நேற்று வந்தனர்.

தூத்துக்குடி, மார்ச்.14-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட 3 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நேற்று வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், தேர்தல் செலவினங்களை மேற்பார்வையிடவும் தேர்தல் ஆணையத்தால் 3 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குண்டன் யாதவை 9489947507 என்ற செல்போன் எண்ணிலும், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் தீபக்கை 9489947508 என்ற செல்போன் எண்ணிலும், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திர குமார் மிஸ்ராவை 9489947509 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் அளிக்கலாம். மேலும் தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story