தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான ‘பிரீசர் பாக்ஸ்' இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வழங்கியது


தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான ‘பிரீசர் பாக்ஸ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வழங்கியது
x
தினத்தந்தி 14 March 2021 11:27 AM IST (Updated: 14 March 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஜான் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

சென்னை, 

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஊழியர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட முன்கள பணியாளர்கள் 3 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு மற்றும் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும்பட்சத்தில் கருணைத்தொகை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை பொறுத்தமட்டில் பிரீசர் பாக்சில் (குளிர்சாதன பெட்டி) தான் வைக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்தி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தற்போது தமிழகம், பீகார், மணிப்பூர், காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான பிரீசர் பாக்ஸ்களை வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story