மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு


மின்சாரம் தாக்கி 2 மாடுகள் சாவு
x
தினத்தந்தி 15 March 2021 8:31 PM IST (Updated: 15 March 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி 2 மாடுகள் இறந்தன.

தொண்டி, 
திருவாடானை தாலுகா கருமொழி ஊராட்சி ஆட்டூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, ஆரோக்கியசாமி ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் கோவணி கிராமத்தின் அருகே வயல் காட்டில் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி 2 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் கொக்கு, பாம்பு, குருவி போன்ற பறவைகளும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story