மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்


மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்
x
தினத்தந்தி 16 March 2021 2:05 AM IST (Updated: 16 March 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

சுயதொழில் புரிவோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோருக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்துகிறது.

விருதுநகர், 
சுயதொழில் புரிவோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோருக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்துகிறது.
காப்பீட்டு திட்டம்
 இதுபற்றி பொதுக்காப்பீட்டுநிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- 
மத்திய அரசு காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் மூலம் சரள் பென்ஷன் யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 இத்திட்டத்தின் மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிவோர், தங்கள் ஓய்வு காலத்தில் பலனடையக்கூடிய வகையிலான புதியகாப்பீட்டுதிட்டமாகும்.
தவணைத்தொகை 
 இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.1000 தவணைத்தொகை செலுத்த வேண்டும். இத்தொகை மாதந்தோறும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை கூட செலுத்தலாம்.
 இது தவிர ஒரே தடவையில் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. இரண்டு வகையாக அதிகபட்சமாக எவ்வளவு தொகையையும் செலுத்தலாம். அதற்கேற்ப ஓய்வூதியமும் அதிகமாக கிடைக்கும்.
சட்டப்பூர்வ வாரிசு 
 40 வயது முதல் 80 வயது வரை இருப்பவர்கள் இதில் சேர வாய்ப்பு உள்ளது. இதில் இரண்டு வகைகள் உள்ளது முதல் திட்டத்தின்படி ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வு ஊதியம் வழங்கப்படும். அவரது மறைவிற்கு பிறகு மொத்த தொகையும் அவர் குறிப்பிட்டுள்ள நாமினிக்கு வழங்கப்படும்.
 இரண்டாவது வகையில் காப்பீடுதாரரும், நாமினியும் இறக்கும் பட்சத்தில் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு ஓய்வு தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் சரண்டர் செய்து ஓய்வுத்தொகையை முழுமையாக பெற முடியும்.
வரிவிலக்கு 
இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஓய்வூதியம் பெறும் காலம் வரை முழுவதும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
 ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு வேறு எந்தவித வருமானமும் இல்லை என்றாலும் எந்தவித வரிப்பிடித்தமும் இல்லாமல் முழு ஓய்வூதியத்தொகையும் கிடைக்கும். இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே சுயதொழில் புரிவோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்று பயனடையலாம்.
 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story