கடையம் அருகே கிணற்றில் மூழ்கிய வாலிபர்

கடையம் அருகே கிணற்றில் வாலிபர் மூழ்கினார்.
கடையம், மார்ச்:
கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த மாசாணம் மகன் ஆத்தியப்பன் (வயது 23). இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறமுள்ள கிணற்றில் குளிக்க சென்றார். செல்லும் வழியில் நண்பர்கள் இருவரும் குளத்துக்கரைக்கு சென்றதால் ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றார். அங்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்த ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சுவற்றின் மீது துணிகள் மட்டும் இருந்தன. அவரது நண்பர்கள் அவரை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் வந்து தேடினர். தென்காசி தீயணைப்பு நிலையத்தினரும் வந்து இரவு 9 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story