சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சேலத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
சேலம்,
2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி சேலத்தில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் சேலம் கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
மேலும் சேலம் கோட்டையில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story