கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12576 பேர் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இது வரை 12 ஆயிரத்து 576 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி கோவையில் 15,09,531 ஆண் வாக்காளர்கள், 15,52,799 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 414 என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் உள்ளிட்டவற்றிற்காக ஆன்லைன் மூலமும் நேரிடை யாகவும் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 19-ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். அதன் பின்னர் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் தற்போதைய சட்ட மன்ற தேர்தலில் சேர்க்க இயலாது.
கடந்த 20-ந் தேதி முதல் தற்போது வரை 12 ஆயிரத்து 576 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேரிடையாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 8 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதையடுத்து வருகிற 21-ந் தேதி இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த வாக்காளர் பட்டியில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story